Saturday, September 15, 2012

முகம் மறைத்த முஸ்லிம் பெண்ணும் வாலிபனும்




தானாகவே செத்தவைகளையும்
இரத்தத்தையும்
பன்றியின் மாமிசத்தையும்
அல்லாஹ் அல்லாத கடவுளுக்குப்
படையல் செய்யப்பட்டவைகளையும்
உங்களுக்கு அல்லாஹ்
ஹராமாக ஆக்கியிருக்கிறான்

ஆனால்
தானே விரும்பாமலும்
வரம்பு மீறாமலும்
அவசியம் காரணமாக
எவரேனும் கட்டாயப்படுத்தப்பட்டால்
இவற்றை உண்பது குற்றமில்லை

அல்லாஹ் கருணைமிக்கோனும்
மன்னிப்பவனுமாக இருக்கின்றான்

குர்-ஆன் 2:173

1 comment:

  1. அகுல்யதத் என்ற இணைதளத்தில் உள்ள எனதுகடிதம்
    படித்தேன்.பார்த்தேன்.ரசித்தேன்.களித்தேன்.நன்றி உடையில் கண்ணியம் ஆண் பெண் என்ற பேதம் இன்றி அனைவருக்கும் தேவை என்பதை நானும் கடைபிடித்து வருகின்றேன். மற்றவர்களுக்கும் சொல்லுவதுண்டு. ஆனாலும் முகத்தை மூடிக் கொண்டு செல்வதை முஸ்லீம் பெண்கள் பின்பற்றுவதை அவர்களின் சொந்தவிசயமாக வே முடிவு செய்கின்றேன். அவர்கள் பின்பற்றித்தான் ஆக வேண்டும் என் நினைத்தால் .... பின்பற்றட்டும். அழகான தோற்றம் கொண்ட பெண்களால் பிறர் மனதில் பாலியல் ஆசைதான் தூண்டப்படும் என்ற கருத்து தவறானது.அனைவரும் அக்கா தங்கையோடு பிறந்தவர்கள்தாம்.ஒருதாயிடம் பிறந்து பால்குடித்து வளர்ந்தவர்கள்தாம். எனது வாழிவில் ” பிரம்மச்சரியம் ” என்ற விரதத்தை 14 வயதில் ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் நூல்களை எனக்கு க்ற்றுத் தந்த ஆசிரியரின் ஆலோ சனை பேரில் ஏற்றுக் கொண்டு வாழந்து எனது வாலிப பருவத்தை கற்பு நெறி தவறாது வாழ்ந்தேன். எந்த அழகியப் பெண்ணையும் ஒருமுறைக்கு மேல் திரும்ப பார்த்தது யில்லை.பெண்களை கூர்ந்து நோக்கியது கிடையாது. மனதை அலைய விடாது புத்தங்கள் படிப்பது,அதுகுறித்து சிந்திப்பது என மனதிற்கு மனித வளத்தை ப் பெருக்கும் வேலைகளைக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.அதுபோக ” ஓம் நமசிவாய ” என்ற ஐந்தெழுத்து மந்திரம் மனதில் நிறைந்திருக்க வேண்டும்.எனது கற்பு ஒழுக்கத்தைக் காக்க ஆசிரியர் சொன்ன ஆலோசனை இவ்வளவுதான். கடைபிடித்து வாழ்ந்து வருகின்றேன். ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தரின் 150 பிறந்த ஆண்டு விழா நிகழ்ச்சியில் ” தனது தாய்,தமக்கையார்கள், அண்ணிமார்கள்,தனது மனைவி என்று தனது உறவில்உள்ள அனைத்து பெண்களும் கற்பு நெறியில் தவறாதவர்கள் என்று நம்பும் ஒரு இளைஞன் தானும் கற்பு நெறி தவறாது வாழ முடியும் என்று நினைத்தால் பிரம்மச்சரியம் கடைபிடிக்க முடியும். பிரம்மச்சரிய ஒழுக்கம் கைவிடப்பட்டதனால் இந்தியா சமூக ஒற்றுமையை இழந்து ,வீழ்ந்து போனது என்று எனது உரை பிரம்மச்சரிய ஒழுக்கத்தை ஆண்கள் பேண வேண்டிய அவசியம் குறித்ததாக அமைந்தது. முஸ்லீம் சமூகத்தில் ஒழுக்கசீலர்களுக்கு பஞசம்யில்லை. பிரம்மசசரியம் தவறாத இளைஞர்கள் பலபேரை நான் அறிவேன்.

    ReplyDelete