Saturday, July 14, 2012

இறைவன் யார்?

இறைவனைப் பற்றி அவன் குணம் யாது என்பது பற்றி குர்-ஆனில் சொல்லப்பட்டதை அக்கறையோடு கவனித்தால் இஸ்லாம் பற்றிய தெளிவு  தெளிவாகவே பிறக்கும்.

அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அவனே இறைவன்

குர்-ஆனின் தொடக்கமே இந்த வரிகள்தாம்!

இறைவன் யார்?

அன்புடையவனே இறைவன்
இறைவனிடம் மட்டுமா அன்பிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அன்பிருக்கிறது
ஆனால் இறைவனிமிருக்கும் அன்பு எப்படியானது?
நிகரற்றது - அப்படியான நிகரற்ற அன்பினை
மனிதனால் பெறவே முடியாது

அருளுடையோனே இறைவன்.
இறைவனிடம் மட்டுமா அருளிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அருளிருக்கிறது
ஆனால் இறைவனிடமிருக்கும் அருள் எப்படியானது?
அளவில்லாதது - அப்படியான அளவிலா அருளை
மனிதனால் பெறவே முடியாது

அறிவுடையோனே இறைவன்
இறைவனிடம் மட்டுமா அறிவிருக்கிறது
மனிதர்களிடமும்தான் அறிவிருக்கிறது
ஆனால் இறைவனிடம் இருக்கும் அறிவு எப்படியானது?
அளவில்லாதது - அப்படியான அளவில்லாப் பேரறிவை
மனிதனால் பெறவே முடியாது

நீங்கள் அறியாததையும் அறிந்தவன் இறைவன்
அளவற்ற நிகரற்ற அறிவுடையோன் இறைவன்

அதனால்தான் அவன் மனிதர்களிடம் சொல்கிறான்
என்னை அறிவதற்காகவேயன்றி வேறெதற்காகவும்
உங்களை நான் படைக்கவில்லை என்று

இறைவனை அறிவதென்பதென்ன சும்மாவா?
அதற்கு எத்தனை அறிவு வேண்டும்?

என்னை அறிவதற்காகவே உங்களைப் படைத்தேன்
என்று இறைவன் கூறும்போது எத்தனை அறிவை
அவன் மனிதனுக்குத் தந்திருப்பான்

மனிதன் அதைப் பயன்படுத்த வேண்டாமா?

அறிவைத் தேடும் அறிவுடையவன்தானே இஸ்லாமியன்!

1 comment:

  1. Lord, make me an instrument of your peace;

    பிரான்சீஸ் அசீசீ என்பவரின் தொழுகை வேண்டுதல்
    where there is hatred, let me sow love;
    when there is injury, pardon;
    where there is doubt, faith;
    where there is despair, hope;
    where there is darkness, light;
    and where there is sadness, joy.
    Grant that I may not so much seek
    to be consoled as to console;
    to be understood, as to understand,
    to be loved as to love;
    for it is in giving that we receive,
    it is in pardoning that we are pardoned,
    and it is in dying [to ourselves] that we are born to eternal life.
    கைஒன்றை செய்ய விழி ஒன்றை காண கருத்தொன்றை எண்ண;
    பொய் ஒன்றை வஞ்சக நா ஒன்றை பேச புலால் கமழும்
    மெய் ஒன்றை சார செவி ஒன்றை கேட்க விரும்பும்யான்
    செய் கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினை தீர்த்தவனே

    புலன்களை அடக்கும் முறையே பூசை தவிர, நம் ஆசை நிறைவேற்ற இறைவனால்
    கூட ஆகாது என்பதை இந்த பாடல் சொல்கிறது :


    மஅழுதால் பயனென்ன? நொந்தால் பயனென்ன ? ஆவதில்லை
    தொழுதால் பயனென்ன ? நின்னை ஒருவர் கடவுரைத்த
    பழுதால் பயனென்ன ? நன்மையும் தீமையும் பங்கையதொன்
    எழுதாப்படி வருமோ? சலியாதிரு என் ஏழை நெஞ்சே!


    நன்மையும் தீமையும் இறைவனின் சூத்திர கயிர் அசைப்பில் உள்ளதை அறிந்து
    நாம் இரண்டையும் ஏற்றுகொள்ளவேண்டும்


    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு.


    எந்த ஒரு செயலையும் நாம் முடித்த பின்பு ஏற்படக்கூடிய இரு விளைவுகள் நம்மை சேராது அது இறைவனையே சேரும் என்று உணர்ந்தவர்கள் இறைவன் பொருள் தெரிந்து புகழ் பெறுகின்றார்கள்.


    ஒன்று என்றிரு, தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெலாம்
    அன்று ரென்றிரு, பசித்தோர் முகம் பார், நல்லறமும் நட்பும்
    நன்று என்றிரு , நடு நீங்காமலே நமகிட்டபடி
    என்று என்றும் இரு, மனமே உனக்கு உபதேசமிதே.



    ReplyDelete